Thursday, August 4, 2016

ஊரணி

ஊரணி:

மக்களின் குடிநீர் தேவைகளை போக்க பழங்காலம் தொட்டு ஊரணிகள் பயன்பட்டு வந்தன.

இந்த ஊரணிகளில் இருந்து விவசாயத்திற்காக நீர் வெளியேற்றப்பட மாட்டாது. குடிநீர் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

மழை காலங்களில் சேமிக்கப்பட்ட நீர் பல மாதங்கள் பயன்படும்.

நீர் ஆவியாகமல் தடுக்க அமெரிக்காவில் உள்ள ஏரிகளில் லட்சக் கணக்கான பலூன்களை மிதக்கவிட்டுக்ளனர். நம்மூர் மக்கள் நீர் ஆவியாகமல் இருக்க ஊரணிகளில் தாமரைகளை செலவில்லாமல் நட்டு வைத்திருந்தனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தேனூர் பகுதிகளில் பயன்பட்டு வந்த ஊரணிகள்.

1. இலுப்பை ஊரணி - பிள்ளையார் கோவில் அருகில்

2. குன்னக்கோன் ஊரணி (சுடுகாடு அருகில்)

3. வ.களம் ஊரணி

4. வலைய ஊரணி ( கி.களம்)

5. தாமரை ஊரணி ( மாங்குளம் அருகில்)

6. பட்ட ஊரணி ( முருக்கப்பட்டி)

இன்னும் பல.......

இவையெல்லாம் முறையாக பராமரிக்க பட்ட காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு நமது சுற்று வட்டாரத்தில் ஏற்பட்டது இல்லை.

ஆனால் இன்று அவையெல்லாம் கழிப்பிடங்களாகவும், கால்நடைகள் மேயும்/குளிப்பாட்டும் பகுதிகளாகவும் மாறி விட்ட காரணத்தினால் , ஆழ் குழாய்களை நம்பி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் "கேன்" களில் குடிநீர் வாங்கி பருகும் அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.

ஊரணி தண்ணீரில் இருந்த சுவையும், சத்தும் கேன் நீரில் இல்லவே இல்லை.

இன்னும் வெகு சில ஊர்களில் ஊரணி பயன்பாடு உள்ளது.

 அழிந்து போனது ஊரணி மட்டுமல்ல. நம் ஆரோக்கியமும் தான்.

No comments:

Post a Comment