Saturday, August 6, 2016

விழிப்புணர்வு பதிவு

வணக்கம் நண்பர்களே!

புதிய சிம் கார்டுகள் வாங்கும் போது அறிமுகம் இல்லாத கடைகளில் வாங்காதீர்கள்.

உங்கள் புகைப்படம் மற்றும் முகவரி சான்றை ஸ்கேன் செய்து பல சிம் கர்டுகளை வாங்குகிறார்கள்.

அறிமுகம் உள்ள கடைகள் அல்லது ஸ்டோர்களில் சிம் கார்டு வாங்குவது நல்லது.


Thursday, August 4, 2016

அணில் கடித்த பனங்காய்

அணில் கடித்த பனங்காயின் அடுத்த சுளை ருசித்ததுண்டா...!?

அக்கறையாய் அதைக்கடித்து
பற்கறையாய் ஆனதுண்டா.?!

தொலைந்த அந்தக்காலமெல்லாம் துயரங்களைத் தந்ததுண்டா..?

 நினைத்துப்பார்க்கும் நேரமெல்லாம் மனம்
 நிம்மதியை பெறுகிறதே..!

இளவட்ட கல்

இளவட்டக்கல்....

வீர விளையாட்டுகள் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளங்கள்....

 சீறிப்பாயும் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் அடக்குபவருக்கும்,  இளவட்டக்கல்லை தோளில் தூக்கி வீசும் வீரமிக்கவருக்கும் பெண் கொடுக்கும் பழக்கத்தை தமிழர்கள் வீர விளையாட்டாக ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வந்தனர்.

 ஆனால் காலத்தின் மாற்றத்தில் இந்த விளையாட்டுகள் காண்பதற்கு அரியவையாக மாறி விட்டன.

 பொங்கல் விழா நாட்களில் இந்தப்போட்டி நடைபெறும்..  அதனால்தானா என்னவோ தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். பலருக்கு வலியும் பிறப்பதுண்டு.

தேனூருக்கு அருகில் உள்ள #மீனவேலி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, நித்தகாளியம்மன் கோயில் முன்பாக 45 மற்றும் 65 கிலோ இளவட்டக் கற்கள் இரண்டு இருக்கிறது.

வாய்ப்பு இருந்தால் கல்லை தூக்கி பாருங்கள்.

கல்லை காலில் போட்டுக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பு அல்ல.

வேண்டாம் வீட்டு மனை

தேனூர் ஊராட்சி எல்லையில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறவில்லை.

இனியும் மாறக் கூடாது என்பதே நம் விருப்பம்.

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு.


ஆமணக்கு - பயன்கள்

காட்டாமணக்கின் பயன்பாடு ஏராளம்

பொதுவாக காட்டாமணக்கு என்றால் இயற்கை எரிபொருளை கொடுக்கும் தாவரம் என்று கூறுவர். ஆனால், காட்டாமணக்கு ஒரு சிறந்த மூலிகை பயிர் ஆகும். இது அனைத்து பகுதிகளிலும் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. காட்டாமணக்கு தாவரத்தில் இருந்து வரும் பால் போன்ற திரவம் பல் வலிக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.

காட்டாமணக்கின் நுனிக்குச்சிகளை கொண்டு பல் துலக்கும் கிராமத்தினர் தற்போதும் உண்டு. இதனால் பல் சொத்தை, பற்சிதைவை உண்டாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், சித்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த பால் போன்ற திரவத்தில் ஜெட்ரோபின், ஜெட்ரோபாம், காகேன் போன்ற வீரியம் நிறைந்த ஆல்கலாய்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும், இந்த வெள்ளை திரவத்தை தேள் அல்லது தேனி கொட்டிய இடங்களில் வைத்தால் கொட்டிய பூச்சியின் கொடுக்கு வெளியில் வந்துவிடும் எனவும் கிராமங்களில் கூறுவர். காட்டாமணக்கின் இலைச்சாறும் மருத்துவத்திற்கு உதவுகிறது. இதில் அபிஜெனின், விட்டெக்சின், ஜசோவிட்டெக்கின் என்கின்ற மூலக்கூறுகள் அதிகளவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் மலேரியா, மூட்டுவலி, தசைவலிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மேலும், மஞ்சள்காமாலை, புற்றுநோய், இருமல், கக்குவான், வீக்கம், வயிற்றுப்புண், நிமோனியா, வீக்கம், வாதநோய்களை குணப்படுத்த உதவுகின்றன என ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றன.

இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பாம்புகடிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வேரை இடித்து சாறாக்கி கொப்பளித்தால் பல் ஈறுகளில் இருந்து வடியும் ரத்தகசிவை உடனடியாக நிறுத்தலாம். இத்தாவரத்தின் விதையில் மட்டும் சில நச்சுப்பொருட்கள் உள்ளதால் இதை மட்டும் மருத்துவத்திற்கு நேரடியாக பயன்படுத்த முடியாது. இன்றைய காலகட்டங்களில் பல மூலிகை பயிர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதில், காட்டாமணக்கு பயிரையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம்.
நீங்கள் படித்த பள்ளி எது?

1. அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி.

2. அரசினர் மேல்நிலைப் பள்ளி, வளநாடு.

3. புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளி, பாலகுறிச்சி.

4. மற்றவை.

[Thanks to photographer]

ஆடு வளர்ப்பு

ஆட்டு எருவுக்கு இணையான உரம் எதுவும் இல்லை.

நம் ஊரில் பல வீடுகளில் இருந்த ஆடு வளர்ப்பு , பராமரிக்க இயலாமல் பலர் இவ்வேலையை கைவிட்டு உள்ளனர்.

இன்னும் எஞ்சி இருக்கிறது, சில வீடுகளில்

ஆடு வளர்ப்பு.